Saturday, May 15, 2010



வானியல் குறித்த அயல் நாட்டினரின் கொள்கைகள் :
    
                    கி.பி.1775 -இல் பேராசிரியர் கான்ட் , கலிலியோ போன்ற வானியல் அறிவியலார சூரியனைச்சுற்றி கோள்கள் முட்டை வடிவ நீள் வட்டசமதலப்பாதைகளில் தத்தம் நிலைகளில் சுழலுகின்றன என்றும் இவைஅனைத்தும் அறிவியலின்படி நிகழகின்றன எனவும் வ்லியுரிதியுள்ளனர். இக்கோட்பாட்டினை கி.பி.1796-இல் லாப்லேஸ் என்பார் கணிதவியலின் அடிப்படையில் சீர்செய்தும் , கோள்கள் சூரியனை கிழக்கிலிருந்து மேற்காக சுற்றிவருகின்றன என்றும் கெப்ளர் என்பார் சூரியனைச்சுற்றி கோள்கள் சுற்றிவருவதர்கான நகர்வு விதிமுறைகளை நிறுவினார்.

                   மேற்படி அயல் நாட்டினரால் கண்டுரைக்கபட்ட சூரியமைய கொள்கையின்படி பூமியும் அதற்க்கு உபகோள்ஆக பாவிக்கப்பட்ட சந்திரனும் இணைந்து சூரியனை நீள்வட்டபதையில் ஒரு முறை சுற்றி முடிக்க 365.25 நாட்கள் ஆகின்றன எனவு ம அதனால்தான் வானில் ஆறு மதாங்களுக்கொருமுறை சூரிய மற்றும் சந்திர கிரகனங்கள் தோன்றுவதகவும் உலகின் இந்தியர் உள்ளிட்ட அனைவராலும் ஏற்கப்பட்டு பின்பற்றபட்டுவ்ருகின்றது. மேலும் தற்கால வானியலார் இதுபோன்ற பல சூரிய குடும்பங்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளதகவும் கூறிவருகின்றனர்.

                     ஆயினும் அயல்நாட்டு வானியல் வல்லுனர்களால் உணரப்பட்ட இக்கொள்கைகள் யாவும் வானில் 27 நட்சதிரக்கூடங்களின் ஒருகிணைந்த அமைவு நிலை  அறிந்திடாதநிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உணரமுடிகின்றது. இந்நிலையில் இந்தியர்கள் உட்பட உலகின் பன்னாட்டு வானியலாரும் சூரியமையக்கொள்கையே வானியலில் அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவும் அதனால் வானியில் கொள்கையில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகவும் கருதுகின்றனர்.

                        சென்ற சில நூற்றாண்டுகளாக வானில் 27 நட்சதிரக்கூடங்களின் நிலைமாறா  மற்றும் ஒருகினைய்ந்த அமைவுமுறை அறியப்படாத நிலையில் அவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளபடாமல் புளூடோ, நெப்டியூன் , யுரேனஸ்  போன்ற புதிய கோள்களும் சூரியனை சுற்றிவருவதாகவும் மேலும் அண்மைக்காலத்தில் புளூடோ ஒரு கோள் அல்ல எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

                          இந்தியாவில் ஆங்கிலேயரின்  ஆட்சிகாலத்தில் கிருத்துவ சமயத்தை பரப்புவதற்காக பதிரியராக வந்த எபினேசர் பர்கஸ்  என்பார் இந்தியர்களின் வானசாஸ்திர நூலாகிய சூரிய சித்தாந்தத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்கள். அவர், தம் மொழியாக்கத்தில் வானில் தெரியும் நட்சதிரகூட்டங்கள் குறித்த பல்வேறு நாட்டினரின் கருத்துகளை சுட்டியதொடு மட்டுமல்லாமல் வானில் தெரியும் நட்சதிரகூட்டங்கள் குறித்த ஆய்வு இந்திய ஜோதிடவியல் , இந்தியவானசாஸ்திரம், மற்றும் சமஸ்கிருதமொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டால் வானியல் குறித்த உன்ன்மைசெய்திகள் இன்னும்பல அறிய முடியும் என கூறியுள்ளார். மேற்கூறிய கருத்தினை அடியொட்டி இந்தியர்களின் வானசாஸ்திர நூலாகிய சூரியசித்தாந்தம் ,வேத வாக்கியம் மற்றும் ஜோதிட அடிப்படை நூலான பஞ்சாங்கம் ஆகியவற்றின் துணை யோடு ஆய்வு மேற்கொண்டபொழுது இந்தியர்களின் வானியல் கொள்கையானது முட்டை அல்லது அன்னாசிபழம் அல்லது இரு வாணலிகளை குப்புரக்கவிழ்த்தநில்யில் உள்ள புறப்பரப்புகளில் பரவியுள்ள 27 நட்சத்திர கூட்டங்களினாளன  கோள பரப்பினுள் பூமி மையத்திலும் பிறக்கோள்கள் பூமிக்கும் நட்சதிரகூடங்களுக்கும் இடைப்பட்ட பெருவெளியில் நட்சதிரகூடங்களிளிருந்து வரிசையாக சனி, குரு, செவ்வாய். சூரியன், சுக்கிரன், புதன், மற்றும் சந்திரன் என அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது .


பண்டைய இந்தியர்களும் வானியலும் :


          பண்டைய என்கிற சொல் இந்தியர்களின் வானியல் கொள்கை எவ்வளவு தொன்மையானது என்பதை உணர்த்தவே சிறப்பு சொல்லாக பயன்படுத்தபடுகிறது.
இந்தியர்களின் வாழ்வியலாகமாறிய அவாதம் வானியல் கொள்கைகள் அவர்களின் அன்றாட வாழ்வில் தொடர்பழக்கத்தால்  அனுசரித்தபோதும் புவிமைய  கொள்கையின்படி இப்பிரபஞ்சத்தில் நிலைமாறா 27 நட்சத்திர  கூடங்களின் அமைவு முறை இந்தியர்களுக்கே புரியாத நிலையில் இருந்ததாலும் , பின்நாளில் வெளிநாட்டு வானியல் வல்லுனர்களால் கண்டுரைக்கபட்ட சூரியனைச்சுற்றி கோள்கள் நீள்வட்டப்பாதைகளில் சுழலுகின்றன என்பதனை மறுக்கவாயிப்பில்லாத  நிலையில் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனலாம்.
            
   

No comments:

Post a Comment