Monday, May 31, 2010

pirapanjaththil kolgalin amaivu muraiyum avaigalin suzharchi kala alavu muraiyum

பிரபஞ்சத்தில் கோள்களின் அமைவுமுறையும்,அவைகளின் சுழற்சிக்கால அளவு முறையும், சூரிய மற்றும் சந்திர கிரஹனங்கள் ஏற்படும் விதமும்:            


                                                                                                                                                                                                                                                             பண்டைய இந்தியர்களின் வானியல் கொள்கைக்களின்படி பூமி27     நட்சதிரக்கூடங்களினாலான பிரபஞ்சத்தின் மையத்தில் நிலைகொண்டதோடல்லாமல் தன்னைதானே சுற்றிக்கொண்டு இருப்பதால் பூமிஇணை சுற்றி ஈர்ப்புவிசை எற்படுவதனையும் கண்டுணர்ந்தனர். மேலும்,  27   நட்சதிரக்கூடங்களினால் பிரபஞ்சத்தில் ஏற்ப்படும் இழுவிசை பாதைகளுக்கு இணையாக தத்தம் நிலைகளில் சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கரன்,புதன், மற்றும் சந்திரன் முதலான கோள்கள் பின்னோக்கி, முன்னோக்கி, சாதாரணம்,வேகம்,அதிவேகம்,மெதுவாக, மிகமெதுவாக, மற்றும் குறுக்காக செல்லுதல் போன்ற எட்டுவித நகர்வுகளுக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டிருப்பதனையும் அறிந்ததனால் ஒவொரூக்கோளும் தத்தம் நிலையில் ஒருங்கிணைந்த நட்சத்திர விசைப்பதைக்கினையாக பிரபஞ்சத்தை ஒருமுறை சுற்றிமுடிக்க ஆகும் காலத்தினையும் கணக்கிட்டு சனிககோள் 10956 நாட்கள், குரு 4383 நாட்கள், செவ்வாய் 687 நாட்கள், சூரியன் 365 நாட்கள், சுக்கிரன் 225 நாட்கள் , புதன் 88 நாட்கள்,மற்றும் சந்திரன் 27 நாட்கள் ஆகின்றன என்பதனையும் எடுத்துக்காட்டியுள்ளனர் மேலும், பிரபஞ்சத்தில் உள்ள சனி, குரு, செவ்வாய் ஆகிய கோள்களுக்கு அவைகளின் நகர்வுகளின்போது அவைகளுக்குபின்னால் உள்ள நட்சதிரக்கூடங்களிலிருந்து வெளிப்படும் ஒளிகற்றைகளின் ஊடுருவலினால் பிரபஞ்சத்தில் பூமிக்கும் , சந்திரனுக்கும் உள்ள இடைவெளியில் முறையே கருப்பு, வெளிர்மஞ்சள், மற்றும் சிவப்பு வணனங்களில்  நிழற்படலங்கள் எற்படுவத்னையும் அனால் அவைகளின் நகர்வுகள் பிரபஞ்சத்தில் அவைகளின் தாய்ககோள்களின்.சுழற்சிப்பாதைக்கு எதிர் திசையில் அமைந்துள்ளன என்பதனையும் அறிந்ததனால் மேற்கூறிய கருப்பு மற்றும் சிவப்புவண்ண நிழற்படலங்களே பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சூரிய மற்றும் சந்திர கிரஹனங்கள் ஏற்பட காரணமாகின்றன எனக்கூறியுள்ளனர் .

No comments:

Post a Comment